வட்டி வீத கொள்கையை மாற்றமில்லை!

இலங்கை மத்திய வங்கியின் வட்டி வீத கொள்கையை மாற்றமின்றி பேண நாணயச் சபை தீர்மானித்துள்ளது.

நேற்றைய தினம் ஒன்றுக்கூடிய நாணயச் சபை இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதற்கமைய, துணை நில் வைப்பு வசதிகளை 5 சதவீதமாகவும், துணை நில் கடன் வசதிகளை 6 சதவீதமாகவும் தொடர்ந்தும் பேண தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பேரண்டப் பொருளாதார நிலைமைகளயும் உள்நாட்டு மற்றும் உலகளாவிய பக்கங்களில் எதிர்பார்க்கப்பட்ட அபிவிருத்திகளையும் கவனமாக பரிசீலனை செய்த பின்னர் நாணயச் சபையானது இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! 🛒 தாரணி சூப்பர்மார்கெட் tharanysupermarket.com

சிறப்புச் செய்திகள்