மரக்கறிகளின் விலை மேலும் உயரக்கூடும் என்று அகில இலங்கை பொருளாதார மத்திய நிலைய சேகாிப்பு மைய தலைவர் அருண சாந்த ஹெட்டியராச்சி தெரிவித்துள்ளார்.

பண்டிகைக்காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான விநியோகம் செய்யமுடியாத அளவுக்கு மரக்கறிகளின் விளைச்சளும் விநியோகமும் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக மரக்கறிகளின் விலை உயரும் என்று அருணசாந்த குறிப்பிட்டுள்ளார்

ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் கரட் கிலோ ஒன்று 320 ரூபா முதல் 480 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. கோவா 230 ரூபா முதல் 250 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

லீக்ஸ் 260 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. பீட்றூட் 370 ரூபாவாக விற்பனையாகிறது.

தக்காளி 270 ரூபாவாகவும், போஞ்சி 270 ரூபாவாகவும் விற்பனையாகிறது. பச்சை மிளகாய் 800 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது என்றும் அகில இலங்கை பொருளாதார மத்திய நிலைய சேகாிப்பு மைய தலைவர் அருண சாந்த ஹெட்டியராச்சி குறிப்பிட்டுள்ளார்.


🛒 யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது!!.. வருடத்தில் 365 நாட்களும் 24 மணி நேரமும் வர்த்தக நிலையம் திறந்திருக்கும் tharanysupermarket.com

🌐 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் hi2world.com

🖥️ வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது lankaface.com