இலங்கை – போலந்து நாடுகளுக்கிடையில் வர்த்தக சந்திப்பு

இலங்கைக்கும் போலந்துக்கும் இடையில் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கைகான போலந்து தூதுவர் அடம் புராகோவ்ஸ்கி (Adam Burakowski), வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை கடந்த தினம் சந்தித்தார்.

இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் முழுமையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் வகையில் வர்த்தகம், முதலீடு, சுற்றுலா உறவுகள் மற்றும் மக்களுக்கிடையிலான தொடர்புகளை மேம்படுத்துவதற்கு இதன்போது முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

இது சம்பந்தமாக, இரு நாடுகளினதும் வணிக சபைகளுக்கு இடையேயான வழக்கமான தொடர்புகளின் அவசியம் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.


🛒 யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது!!.. வருடத்தில் 365 நாட்களும் 24 மணி நேரமும் வர்த்தக நிலையம் திறந்திருக்கும் tharanysupermarket.com

🌐 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் hi2world.com

🖥️ வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது lankaface.com

சிறப்புச் செய்திகள்