ஆறு வருடங்களின் பின்னர், இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான நேரடி விமான சேவைகள் இன்று (01) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, இன்று (01) காலை 200 பயணிகளுடன் முதலாவது விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.