தங்காலை நகுலகமுவ பிரதேச சுற்றுலா விடுதியில் அமெரிக்க பிரஜை சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழப்பு!
தங்காலை நகுலகமுவ பிரதேசத்திலுள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் அமெரிக்க பிரஜை ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
54 வயதுடைய குறித்த நபரின் சடலம் நேற்று தீக்காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு உணவு கொண்டு வரும் பெண்ணொருவரே குறித்த சடலத்தை கண்டுள்ளார்.
உயிரிழந்தவர் சில காலமாக குறிப்பிட்ட மருந்தொன்றை பயன்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் தாயாரே சடலத்தை அடையாளம் காட்டியுள்ளார்.
2014 ஆம் ஆண்டு முதல் உனகுருவாவில் அவருடன் வசித்து வந்த தாய் ஆறு மாதங்களாக தனியாக வசித்து வருகிறார்.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
🛒 யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது!!.. வருடத்தில் 365 நாட்களும் 24 மணி நேரமும் வர்த்தக நிலையம் திறந்திருக்கும் tharanysupermarket.com
🌐 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் hi2world.com
🖥️ வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது lankaface.com