இலங்கையில் வீதி விபத்துகளை குறைக்க 2 பில்லியன் அமெ. டொலர் தேவை

நாட்டில் வீதி விபத்துக்களை பாதியாகக் குறைக்க அடுத்த 10 வருடங்களில் 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

இல்லையெனில் அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மோசமாக பாதிக்கும் என்பதை இது காட்டுகிறது.

உலக வங்கியின் அறிக்கையின்படி, இலங்கையில் வருடாந்தம் சுமார் 38,000 வீதி விபத்துக்கள் ஏற்படுகின்றன.

அவற்றில் 3,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுவதுடன், 8,000க்கும் மேற்பட்டோர் காயமடைவதாக தெரிவிக்கப்படுகிறது.

சனத்தொகை அடிப்படையில் தெற்காசியாவிலேயே அதிகளவானோர் வீதி விபத்துக்களால் உயிரிழக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலை வகிப்பதாக உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் வீதி விபத்துக்களின் எண்ணிக்கையானது அபிவிருத்தியடைந்த நாடுகளை காட்டிலும் சுமார் 5 மடங்கு அதிகம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறப்புச் செய்திகள்