இலங்கையில் மூடப்பட்டு வரும் பேக்கரிகள் மற்றும் உணவகங்கள்

நாட்டில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக பல உணவகங்கள் மற்றும் பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இப்பிரச்சினை தொடர்பில் எரிவாயு நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் இதுவரை தீர்வு காணப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது மொத்த பேக்கரி நிறுவனங்களில் 50 சதவீதம் மூடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். சந்தைக்கு எரிவாயுவை வெளியிடுவதை இடைநிறுத்துமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை லிட்ரோ நிறுவனத்திற்கு மீண்டும் அறிவித்துள்ளது.

புதிதாக வெளியிடப்பட்ட சிலிண்டர்களில் எரிவாயு கலவை மற்றும் எரிவாயு கசிவு ஏற்பட்டால் நாற்றம் வீசுவதற்கு பயன்படுத்தப்படும் எத்தில் மெக்காப்டானின் அளவு கொண்ட ஸ்டிக்கர் சிலிண்டரில் ஒட்டப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் அனுமதி பெற்று அந்த ஸ்டிக்கர்கள் சிலிண்டர்களில் ஒட்டப்பட்டுள்ளதென செய்தி வெளியாகியுள்ளது. எவ்வாறாயினும், எரிவாயு சிலிண்டர்களில் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு இலங்கை தர நிர்ணய நிறுவனத்திடம் அனுமதி பெறுமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை லிட்ரோ நிறுவனத்திற்கு நேற்று முன்தினம் இரவு அறிவுறுத்தியுள்ளது.


🛒 யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது!!.. வருடத்தில் 365 நாட்களும் 24 மணி நேரமும் வர்த்தக நிலையம் திறந்திருக்கும் tharanysupermarket.com

🌐 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் hi2world.com

🖥️ வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது lankaface.com

சிறப்புச் செய்திகள்