இலங்கையில் நவீன அடிமைத்தனம் நிகழ்வதாக ஐ.நா தெரிவிப்பு

இலங்கையில் நவீன அடிமைத்தனம் நிகழ்வதாக ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் ரொமோயோ ஒபகட்டா தெரிவித்துள்ளார்.

குழந்தைகள், பெண்கள், சிறுபான்மை இனத்தவர்கள் மற்றும் முதியவர்கள் பெரும்பாலும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் மேற்கொண்ட ஆய்வின் இறுதியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்த அறிக்கையினை அடுத்த வருடம் செப்டெம்பர் மாதம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்திற்கு கையளிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை சிறார்களில் சுமார் ஒரு சத வீதமானவர்கள் குழந்தை தொழிலாளர்களாக சேவைக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ள அவர், அவற்றில் பெரும்பான்மையானவை அபாயகரமான தன்மையைக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆண் மற்றும் பெண் சிறார்கள் வீட்டு பணியாளர்களாகவும், சுத்திகரிப்பாளர்களாகவும் சேவைக்கு அமர்த்தப்படுகின்றனர்.

ஏனையவர்கள் சுற்றுலா துறைகளில் பாலியல் ரீதியாகவும் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.

இவர்களில் பெரும்பான்மையானவர்கள் மலையகத்தை சேர்ந்த தமிழ் சிறுபான்மையினர் என குறிப்பிடப்பட்டுள்ளடன், சிறு வயதிலேயே தமது குடும்பத்திற்காக பணியாற்ற வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு அவர்கள் உள்ளாவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலையக குடும்பங்களின் வாழ்க்கை முறைமை, அவர்களின் இருப்பிடங்கள், கழிப்பறை மற்றும் சமையல் அறை வசதிகள் குறித்து அவர் தமது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.

இதுதவிர, போதிய மருத்துவ வசதி, சமூக பாதுகாப்பு மற்றும் வேதனத்துடனான சுகயீன விடுமுறை போன்றவை வழங்கப்படுவதில்லை.

இந்நிலை குறித்து அரசாங்க அதிகாரிகளுடன் கலந்துரையாட மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் உடனடியாக பலனளிக்கவில்லை எனவும் ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் டொமோயோ ஒபகட்டா தெரிவித்துள்ளார்.

தாரணி சூப்பர்மார்கெட் யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! tharanysupermarket.com

சிறப்புச் செய்திகள்