இலங்கையில் டொலருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ரணிலின் யோசனை….
தற்போதைய பொருளாதார நெருக்கடி மோசமடைவதற்கு முன்னர் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை விரைவில் பெறுமாறு ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
எனினும், இதற்கு நாடாளுமன்றத்தில் அரசாங்கம் சார்பில் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார பதிலளித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை இந்த அரசாங்கம் ஒருபோதும் நாடாது என அமைச்சர் நாணயக்கார வலியுறுத்தியுள்ளார்.
அமைச்சரவைக்கு யோசனை முன்வைப்பு…..
எவ்வாறாயினும், ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனை சூடுபிடிக்கும் முன்னரே அமைச்சரவையில் இது குறித்து முன்மொழியப்பட்டுள்ளது.
அமைச்சர் உதய கம்மன்பிலவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய டொலர் நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாட வேண்டுமென அமைச்சர் கம்மன்பில கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் யோசனை தெரிவித்துள்ளார்.
இந்த பிரேரணைக்கு அமைச்சர் கம்மன்பிலவின் நெருங்கிய அமைச்சரவை சகாவாக இருந்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் அமைச்சர் பந்துல குணவர்தன ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! 🛒 தாரணி சூப்பர்மார்கெட் tharanysupermarket.com