கடந்த ஒக்டோபர் மாதம், இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.16 பில்லியன் டொலர்வரை அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதுவரையில் பதிவான அதியுச்ச ஏற்றுமதி வருமானம் இதுவாகும்.

வருடத்தின் முதல் 10 மாதங்களில் ஏற்றுமதி வருமானம் 12.6 பில்லியன் டொலர் வரை அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டுக்கான ஏற்றுமதி வருமான இலக்கு, 15.7 பில்லியன் டொலராகும்.

இதற்கமைய தற்போது வரையில், அந்த இலக்கை 80 சதவீதம் வரையில் அடைய முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குலக சந்தை மீளத் திறக்கப்பட்டமையால், சந்தைப் பொருட்களின் ஏற்றுமதி அதிகரித்தமை மற்றும் ஏற்றுமதி வருமானம் உயர்வடைந்தமைக்கான காரணமாகும் என ஏற்றுமதி மேம்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! 🛒 தாரணி சூப்பர்மார்கெட் tharanysupermarket.com