அடுத்த இரண்டு வாரங்களுக்குள் கொரோனா பூஸ்டர் டோஸை செலுத்தி முடிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பொது இடங்களுக்கு பிரவேசிப்பதற்கு தடுப்பூசி அட்டைகள் கட்டாயமாக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இனி பொது இடங்களில் கொவிட் தடுப்பூசி அட்டைகளை வைத்திருப்பது கட்டாயம்
கொவிட்-19 பரவலை தடுப்பதற்காக தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்வதை தடுப்பதற்காக தற்போது சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு பொது இடங்களுக்கு செல்லும் போது தடுப்பூசியை அட்டையை உடன் வைத்திருப்பதை கட்டாயமாக்குவதற்கு இன்றைய கொவிட் தடுப்பு செயலணி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🛒 யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது!!.. வருடத்தில் 365 நாட்களும் 24 மணி நேரமும் வர்த்தக நிலையம் திறந்திருக்கும் tharanysupermarket.com
🌐 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் hi2world.com
🖥️ வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது lankaface.com