இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு அதிகளவு ஏற்றுமதி

இலங்கை சுங்கத்தினால் வெளியிடப்பட்ட தரவுகளுக்கு அமைய கடந்த செப்டம்பர் மாதத்தில் 99 கோடியே 58 இலட்சம் அமெரிக்க டொலர் பெறுமதியான சரக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்ட 3 ஆவது அலையை அடுத்து, அமுலாக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் முடக்கங்களுக்கு மத்தியிலான இந்த ஏற்றுமதி, சாதனைக்குரிய விடயம் என ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

இந்த சாதகமான நிலை மேலும் தொடரும் என எதிர்பார்ப்பதாகவும் அந்தச் சபை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, ஆண்டின் முதல் 9 மாத காலப்பகுதியில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 14.97 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்புச் செய்திகள்