இந்த ஆண்டின் முதல் பாதியில் பொருளாதாரத்தில் மீட்சி ஏற்பட்டிருந்த போதிலும், அந்நிய செலாவணி கையிருப்பு குறைதல் உள்ளிட்ட காரணிகளால் 2022ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகள் குறைவடையக்கூடும் என ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) தெரிவித்துள்ளது.
செலாவணி கையிருப்பு குறைவதோடு, அடுத்த ஆண்டு திருப்பிச் செலுத்தப்பட வேண்டிய வெளிநாட்டு படுகடன் பெரும் அளவில் உள்ளதன் காரணமாக வெளிநாட்டுக் கடனை செலுத்துவதற்கு பாதீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள தொகையை விட அதிகமான ஒதுக்கம் தேவைப்படும் என்பதைக் காட்டுகிறது.
அந்நிய செலாவணி கையிருப்பில் ஏற்பட்டுள்ள கடும் சரிவு காரணமாக இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளமை மற்றும் இரசாயன உரங்கள் மீது விதிக்கப்பட்ட தடை என்பவற்றினால் நாட்டின் விவசாயதுறைக்கு ஏற்படும் பாதிப்பானது நாட்டின் பொருளாதாரத்தை வெகுவாக பாதிக்கும் என ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.
🛒 யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது!!.. வருடத்தில் 365 நாட்களும் 24 மணி நேரமும் வர்த்தக நிலையம் திறந்திருக்கும் tharanysupermarket.com
🌐 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் hi2world.com
🖥️ வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது lankaface.com