இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு கடந்த ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் நவம்பர் மாதம் 31 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின் அடிப்படையில் நவம்பர் மாத இறுதியில் அந்திய செலாவணி கையிருப்பு சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலராகும்.
இந்த தொகை நாட்டின் ஒரு மாத இறுக்குமதிக்கு மாத்திரமே போதுமானது.
நவம்பர் மாதம் 30ஆம் திகதியளவில் உத்தியோகப்பூர்வ கையிருப்பு மதிப்பு 1,587 மில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்டது.
இந்த தொகை கடந்த ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி 2,269 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது.
உத்தியோகப்பூர்வ கையிருப்பு வேகமாக குறைவடைந்து வரும் நிலையில் இறக்குமதி செலவினங்களை ஈடுசெய்வதற்கு கடன் நெருக்கடி ஏற்படும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
🛒 யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது!!.. வருடத்தில் 365 நாட்களும் 24 மணி நேரமும் வர்த்தக நிலையம் திறந்திருக்கும் tharanysupermarket.com
🌐 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் hi2world.com
🖥️ வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது lankaface.com