செய்மதி தொழில்நுட்பத்தின் ஊடாக நாடு முழுவதும் இணையத்தள வசதியை வழங்குவதற்கான நடவடிக்கைகளை இலங்கை தொலைதொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது.

இதன்படி, செய்மதி தொழில்நுட்பத்தின் ஊடாக இணையத்தள வசதிகளை வழங்கும் அமெரிக்க நிறுவனமான STARLINK நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகளை, இலங்கை தொலைதொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது.

நாட்டின் பின்தங்கிய பிரதேசங்களுக்கு இணையத்தள வசதிகளை வழங்கும் நோக்கிலேயே, இந்த திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்தியா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து கடல் வழியாக 7 சப்மேரின் கேபள் ஊடாக, இலங்கைக்கு இணையத்தள இணைப்பு தற்போது பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு இலங்கைக்கு கிடைக்கும் இணையத்தளத்தை, சைபர், 3G மற்றும் 4G ஆகிய தொழில்நுட்பங்களின் ஊடாக பயன்பாட்டாளர்களுக்கு வழங்கப்படுகின்றன.

எனினும், பல்வேறு காரணிகளினால், பின்தங்கிய பிரதேசங்களுக்கு இணையத்தள வசதிகளை வழங்க முடியாத நிலைமை தற்போதும் ஏற்பட்டுள்ளதை காண முடிகின்றது.

இந்த விடயங்களை கருத்திற்கொண்டு, செய்மதி தொழில்நுட்பத்தின் ஊடாக தடையற்ற இணையத்தள வசதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு மேற்கொண்டுள்ளது.


⏰ யாழில் இருந்து உங்கள் தாரணி சூப்பர்மார்கெட் 24_மணிசேவை-யை தொடர்ந்து வழங்கி வருகிறது.!

🛒 தாரணிசூப்பர்மார்க்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற  வழி செய்கிறது.

( தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும் )

* குறைந்தது 3,000 ரூபாவிற்கு மேற்பட்ட பொருட்கள் ஓடர் செய்யப்படுதல் வேண்டும்.

* டெலிவரிக் கட்டணம் முற்றிலும் இலவசம்

* நீங்கள் பொருட்களை சரிபார்த்தபின் பணத்தினை செலுத்தலாம் (Bank Cards will be Accepted)

077 1997 206 (Whatsapp, Viber), 021 222 3433, 021 438 1881

No. 758 Kankesanturai Road, Jaffna

Shop Now: tharanysupermarket.com

Google Map: https://goo.gl/maps/TGUngZfzNmx411Pg8