இலங்கைக்கு சமையல் எரிவாயு இறக்குமதி செய்ய இரண்டு சர்வதேச கப்பல்கள்

நாட்டில் எரிவாயு தட்டுப்பாட்டை நிவர்த்திசெய்யும் விதமாக கடந்த வாரம் மூன்று சர்வதேச கப்பல்களில் எரிவாயு கொண்டுவரப்பட்டிருந்த நிலையில், சமையல் எரிவாயு நிரப்பிய மேலும் இரண்டு சர்வதேச கப்பல்கள் இன்று அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தன.

வெகு விரைவில் நாட்டில் எரிவாயு தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்கப்படுமென இலங்கையின் பிரதான எரிவாயு விநியோக நிறுவனங்களான லாப் மற்றும் லிட்ரோ தெரிவிக்கின்றனர்.

இது குறித்து லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தேசார ஜெயவர்தன கூறுகையில்,

ஏற்கனவே லிட்ரோ நிறுவனத்தின் பணிப்பிற்கு அமைய கடந்த வாரம் மூன்று கப்பல்கள் இலங்கைக்கு வருகை தந்திருந்த நிலையில் இவற்றில் இரண்டு கப்பல்களில் உள்ள எரிவாயுவின் தரம் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அவற்றை நாட்டில் இறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மூன்றாம் கப்பலின் எரிவாயுவில் மீதைல் இரசாயன கலப்பு குறித்த கேள்வி எழுந்துள்ள நிலையில் அதனையும் நிவர்த்தி செய்யும் செயற்பாடுகள் இப்போதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இது குறித்து லாப் நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே.எச் வாகபிடிய தெரிவிக்கையில்,

தரத்தில் உயரிய எரிவாயுவை நாம் இலங்கைக்குள் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். தர நிர்ணய சபை மற்றும் நுகர்வோர் அதிகார சபையின் அங்கீகாரத்துடன் இவற்றை நாட்டுக்குள் இறக்குமதி செய்யவும், இன்று தொடக்கம் நுகர்வோர் சந்தைக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

யாழில் #தாரணி #சூப்பர்மார்க்கெட்டில் இன்று வாங்கும் பொருட்கள் அனைத்தும் ஒருவருக்கு இலவசம்!

Posted by Jaffna Jet on Wednesday, December 22, 2021

சிறப்புச் செய்திகள்