உலகம் முழுவதும் கொவிட் தொற்று பரவி வரும் நிலையில், இலங்கைக்கான வாகன இறக்குமதி முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு இதற்குக் காரணம் என அரசாங்கம் தெளிவாகக் கூறியுள்ளது.
எவ்வாறாயினும், வாகனமொன்றை சொந்தமாக்கிக்கொள்ளும் கனவுடன் இருக்கும் இந்நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது உரையில் மூலமாக நேற்று ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.
எரிபொருளில் இயங்கும் வாகனங்களுக்குப் பதிலாக மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை இறக்குமதி செய்ய எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
நேற்று (24) கல்யாணி பொன்நுழைவு எனப்படும் புதிய களனி பாலத்தைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். எங்களிடம் நிலக்கரி இல்லை, எண்ணெய் இல்லை, எரிவாயு இல்லை. ஆனால் எங்களிடம் தண்ணீர், காற்று, சூரிய ஒளி என்பன இருக்கிறது.
நம் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் எரிபொருளில் 71 சதவீதமானவை வாகனங்களுக்காக கொண்டு வரப்படுகின்றதாயின், ஏன் நாட்டுக்கு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய முடியாது. நாம் இவற்றைச் சிந்தித்து தீர்வொன்றை கொண்டுவர வேண்டும் என்றார்.
யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! 🛒 தாரணி சூப்பர்மார்கெட் tharanysupermarket.com