இலகுரக விமானத்தில் உலகம் சுற்றும் இளம் யுவதி இலங்கை வந்தார்!

இலகுரக விமானத்தில் தனியாக உலகை சுற்றிவரும், 19 வயதுடைய இளம் விமானியான ஸாரா ரதஃபோர்ட் (Zarah Rutherford) இன்று(28) இரத்மலானை விமான நிலையத்தை வந்தடைந்தார்.

தனது பயணத்தின் ஒரு அங்கமாக அவர், இந்தோனேஷியாவிலிருந்து இவ்வாறு இலங்கை வந்துள்ளார். இலகுரக விமானத்தில், உலகைச் சுற்றி வந்த மிக இளம் வயது விமானியாக ஸாரா கருதப்படுகிறார்.

இந்த பயணத்தின் போது, ​​அவர் தனது விமானத்தை 52 நாடுகளில் தரையிறக்க திட்டமிட்டுள்ளார் என்றும், பூமத்திய ரேகை ஊடாக இரண்டு உலகை சுற்றிவர எதிர்பார்த்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனூடாக, 30 வயதான அமெரிக்க விமானியான ஷெஸ்டா வயிஸ் 2017 ஆம் ஆண்டு புரிந்த சாதனையை முறியடிக்க ஸாரா முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

பிரித்தானிய விமானிகளின் குடும்பத்திலிருந்து வந்த சாரா, தனது 14 வயதில் விமானியாக தனது முதல் அனுபவத்தைப் பெற்றதுடன், 2020 ஆம் ஆண்டில் தனது 17 ஆவது வயதில் விமானம் செலுத்துவதற்கான அனுமதிப்பத்திரம் பெற்றார்.

உலகின் அதிவேக இலகுரக விமானங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஷார்க் யூ.எல் விமானத்தில் அவர் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த பயணத்தின் போது, ​​ஸாரா அட்லாண்டிக் வழியாக கிறீன்லாந்து, கனடா, தென் அமெரிக்கா வழியாக அலாஸ்காவுக்குச் சென்று அங்கிருந்து ரஷ்யா மற்றும் இந்தோனேசியாவுக்கு பயணிக்கவுள்ளார்.

அதன்பின்னர் அவர் தனது சாகசப் பயணத்தை ஐரோப்பா நோக்கி முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 11 ஆம் திகதி பெல்ஜியத்தின் ரஸல்ஸ் நகரில் தனது சுற்றுப் பயணத்தைத் தொடங்கிய ஸாரா, இன்னும் மூன்று மாதங்களில் அதனை நிறைவுசெய்ய எதிர்பார்த்துள்ளார்.


இலங்கை சூப்பர்மார்க்கெட் வரலாற்றில் முதன் முறையாக, நாளாந்தம் ஒரு வெற்றியாளர்…

நீங்கள் கொள்வனவு செய்யும் பொருட்களுக்கான சிட்டையினை (Bill) குலுக்கல் முறைக்கு உட்படுத்துவதன் மூலம் சிட்டையில் உள்ள மொத்தக் கொள்வனவுப் பெறுமதியில் மீண்டும் இலவசமாக பொருட்களை கொள்வனவு செய்யக்கூடிய வவுச்சர்களை உங்கள் தாரணி_சூப்பர்மார்க்கெட் வழங்கிவருகின்றது.

(யாழ் மாவட்டத்தின் எந்தவொரு மூலையில் இருந்தும் ஒன்லைன் ஓடர் மூலம் பொருட்களை கொள்வனவு செய்பவர்களும் இச் சீட்டிழுப்பில் பங்குபற்ற முடியும்)

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வெற்றியாளர்… இவ் அதிரடிச் சலுகை 22.12.2021 முதல் 01.01.2022 வரை.

அத்துடன் 100 வரையான பொருட்களை இக் காலப் பகுதியில் விசேட விலைக்கழிவில் கொள்வனவு செய்யும் வாய்ப்பினையும் பெற்றுக்கொள்ளுங்கள் (Terms and Condition Apply)
மேலதிக தகவலுக்கு இன்றே நேரடியாக விஜயம் செய்யுங்கள்…

⏰ உங்கள் தாரணி சூப்பர்மார்கெட் 24_மணிசேவை-யை தொடர்ந்து வழங்கி வருகிறது.!

🛒 தாரணிசூப்பர்மார்க்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற யாழில் இருந்து வழி செய்கிறது.

( தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும் )

* குறைந்தது 3,000 ரூபாவிற்கு மேற்பட்ட பொருட்கள் ஓடர் செய்யப்படுதல் வேண்டும்.

* டெலிவரிக் கட்டணம் முற்றிலும் இலவசம்

* நீங்கள் பொருட்களை சரிபார்த்தபின் பணத்தினை செலுத்தலாம் (Bank Cards will be Accepted)

077 1997 206 (Whatsapp, Viber), 021 222 3433, 021 438 1881

No. 758 Kankesanturai Road, Jaffna

Shop Now: tharanysupermarket.com

Google Map: https://goo.gl/maps/TGUngZfzNmx411Pg8

சிறப்புச் செய்திகள்