எக்ஸிம் எனப்படும் இந்திய ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வங்கியின் பிரதிநிதிகள், இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
தமது நிதி உதவிகள் மூலம், இலங்கையில் நடைமுறையாகும் ஒன்றிணைந்த நீர் விநியோகத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து கண்காணிக்கும் நோக்கில் அவர்களின் இந்தப் பயணம் அமைந்துள்ளது.
இந்திய எக்ஸிம் வங்கி, இலங்கையில் நான்கு வேலைத்திட்டங்களுக்கு, 441.42 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.
அவற்றில் இரண்டு திட்டங்கள் தற்போது நிறைவுசெய்யப்பட்டுள்ளன.
இந்தியாவின் தேசிய ஏற்றுமதி காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், சலுகை வட்டி வீதத்தின் அடிப்படையில், இந்தக் கடன் வழங்கப்பட்டுள்ளது.
அளுத்கம மற்றும் பொல்காவலை ஆகிய இடங்களில் இந்திய உதவியில் நிர்மாணிக்கப்படும் திட்டங்களை இந்திய எக்ஸிம் வங்கியின் மூவர் கொண்ட குழு பார்வையிட்டுள்ளது.
இந்தக் குழு, இந்திய உயர்ஸ்தானிகரையும், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை மற்றும் நிதி அமைச்சு ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகளையும் சந்தித்தாக, இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
🛒 யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது!!.. வருடத்தில் 365 நாட்களும் 24 மணி நேரமும் வர்த்தக நிலையம் திறந்திருக்கும் tharanysupermarket.com
🌐 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் hi2world.com
🖥️ வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது lankaface.com