கொவிட்-19 காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ள இந்தியாவுடனான விமான சேவைகளை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஸ்ரீ லங்கன் விமான சேவையின் தலைவர் அசோக் பத்திரகே தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கருத்துரைத்த அவர், கொவிட்-19 பரவலுக்கு முன்னர் காணப்பட்ட வகையில் விமான சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியா இலங்கையின் மிக முக்கிய சுற்றுலா சந்தையாகும்.
இந்திய சந்தையில் ஸ்ரீ லங்கன் விமான சேவையின் செயற்பாடுகள் தொடர்பான ஊக்குவிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஸ்ரீ லங்கன் விமான சேவையின் தலைவர் அசோக் பத்திரகே தெரிவித்துள்ளார்.
யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! 🛒 தாரணி சூப்பர்மார்கெட் tharanysupermarket.com
Post Views: 57