இந்தியாவிலிருந்து மேலும் ஒரு தொகுதி நனோ நைட்ரஜன் உரம் இறக்குமதி

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்படும், 24 இலட்சம் லீற்றர் நனோ நைட்ரஜன் திரவ உரத்தின், இரண்டாம் தொகுதி இன்று (03) நாட்டுக்குக் கிடைக்கப்பெறவுள்ளது.

இந்த நனோ நைட்ரஜன் திரவ உரம் விமானம் மூலம் நாட்டுக்குக் கொண்டுவரப்படவுள்ளது.

விவசாய அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அஜந்த டி சில்வா எமது செய்திச் சேவைக்கு இதனைத் தெரிவித்தார்.

முதற்கட்ட விநியோகத்தில், நனோ நைட்ரஜன் திரவ உரம் கிடைக்கப்பெறாத விவசாயிகளுக்கு, இந்த உரத்தை வழங்க நடவக்கை எடுக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறப்புச் செய்திகள்