அந்நிய செலாவணி கையிருப்பு நெருக்கடியால் இலங்கை எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்காக இந்தியாவிடமிருந்து கடன்கோருவதே நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் இந்திய விஜயத்தின் நோக்கம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிதியமைச்சர் டிசம்பர் மாதத்தில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இந்த வாரத்திலும் இந்த விஜயம் நிகழக்கூடும் என மோர்னிங் தெரிவித்துள்ளது.

இந்தியாவிற்கான தனது விஜயத்தின் போது பசில் ராஜபக்ச இந்திய பிரதமர் நிதியமைச்சரை சந்திப்பதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் அதிகளவு முதலீட்டை ஊக்குவிப்பதே நிதியமைச்சரின் விஜயத்தின் நோக்கம் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தாலும் அந்நிய செலாவணி கையிருப்பு பிரச்சினையால் இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக கடனை கோருவதே அவரது விஜயத்தின் நோக்கம் என சிரேஸ்ட அதிகாரிகள் தெரிவித்தனர் என மோர்னிங் குறிப்பிட்டுள்ளது.

பசில் ராஜபக்ச 1.5 பில்லியன் கடனை கோருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது,இதன் மூலம் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் கோரும் நிலையை தவிர்க்க முயல்வார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் மாதமொன்றிற்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது, இறக்குமதி செலவீனம் 1.3 பில்லியன் டொலர் என தெரிவித்துள்ள சிரேஸ்ட அதிகாரிகள் இந்தியாவிடமிருந்து 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இலங்கை பெற்றால் ஐந்து மாதங்களிற்கு நிலைமையை சமாளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

தாரணி சூப்பர்மார்கெட் யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! tharanysupermarket.com