நாடு முழுவதும் செயலிழந்திருந்த வாகன வருமான அனுமதிக்கான இணைய வசதிகள் மீள செயற்பட ஆரம்பித்துள்ளன.
குறித்த வசதியை பெற்றுக் கொள்வதற்கு இணையத்திற்கு பிரவேசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தமையை அடுத்து இந்த நிலை ஏற்பட்டதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் மாகாண அலுவலகங்களினால் தெரிவிக்கப்பட்டது.
குறித்த இணைய வசதி தடைப்பட்டு இரண்டு வாரங்களாக செயற்பட்டிருக்காத நிலையில் இது குறித்து எமது செய்தி சேவை வெளிப்படுத்தியிருந்தது.
முன்னர் இணையத்தளம் ஊடாக நாளாந்தம் வாகன வருமான அனுமதி பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை 30,000ஆக காணப்பட்டது.
தற்போது அந்த எண்ணிக்கை 60,000ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
🛒 யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது!!.. வருடத்தில் 365 நாட்களும் 24 மணி நேரமும் வர்த்தக நிலையம் திறந்திருக்கும் tharanysupermarket.com
🌐 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் hi2world.com
🖥️ வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது lankaface.com