ஆபிரிக்க வலய நாடுகளுக்கு செல்ல தடை!

புதிய கொரோனா வைரஸ் திரிபு காரணமாக, தென்னாபிரிக்கா உட்பட மேலும் ஏழு தெற்கு ஆபிரிக்க வலய நாடுகளுக்கு, அமெரிக்கா பயணத்தடை விதிக்கவுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை(29) முதல் இந்தப் பயணத்தடை அமுலாக உள்ளதென வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

அமெரிக்க பிரஜைகள் மற்றும் குடியிருப்பாளர்கள் மாத்திரமே குறித்த பிராந்தியத்திலிருந்து அமெரிக்காவுக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட உள்ளனர்.

இதேவேளை, பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா முதலான நாடுகள் உட்பட ஐரோப்பிய ஒன்றியமும் குறித்த நாடுகளுக்கான பயணத் தடையை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! 🛒 தாரணி சூப்பர்மார்கெட் tharanysupermarket.com

சிறப்புச் செய்திகள்