அரச ஊழியர்களை மீண்டும் கடமைக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொது சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் 3 ஆம் திகதி முதல் அரச ஊழியர்கள் மீள கடமைக்கு அழைக்கப்படவுள்ளதாக பொதுச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான சுற்றறிக்கை எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக, வீட்டிலிருந்து பணியாற்றுதல், மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஊழியர்களை சேவைக்கு அழைத்தல் முதலான நடைமுறைகள் அமுலாக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், அனைத்து அரச ஊழியர்களையும் மீண்டும் சேவைக்கு அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
⏰ யாழில் இருந்து உங்கள் தாரணி சூப்பர்மார்கெட் 24_மணிசேவை-யை தொடர்ந்து வழங்கி வருகிறது.!
🛒 தாரணிசூப்பர்மார்க்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது.
( தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும் )
* குறைந்தது 3,000 ரூபாவிற்கு மேற்பட்ட பொருட்கள் ஓடர் செய்யப்படுதல் வேண்டும்.
* டெலிவரிக் கட்டணம் முற்றிலும் இலவசம்
* நீங்கள் பொருட்களை சரிபார்த்தபின் பணத்தினை செலுத்தலாம் (Bank Cards will be Accepted)
077 1997 206 (Whatsapp, Viber), 021 222 3433, 021 438 1881
No. 758 Kankesanturai Road, Jaffna
Shop Now: tharanysupermarket.com
Google Map: https://goo.gl/maps/TGUngZfzNmx411Pg8