அரசாங்க ஊழியர்களின் ஓய்வூதிய வயதெல்லையில் மாற்றம் – 57 ஆக குறைப்பு

அரசாங்க ஊழியர்களின் ஓய்வூதிய வயதெல்லையில் மாற்றம் செய்து அதனை57 வயதாக குறைத்துள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல இதனை இன்று அறிவித்துள்ளார்.

ஓய்வூதியம் பெறுவதற்கான வயதெல்லை முன்னர் 60 ஆக காணப்பட்டது தற்போது அது 57 ஆக குறைக்கப் பட்டுள்ளது என அவர் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

அரச துறையில் தொடர்ந்தும் பணியாற்ற விரும்புபவர்கள் ஐந்து வருட நீடிப்பை கோரவேண்டும் அவர்கள் 62 வயது வரை பணியாற்றலாம் என நிதியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஐந்து வருட நீடிப்பை கோரியவர்கள் இடையில் ஓய்வு பெற விரும்பினால் மூன்று மாத அறிவிப்புடன் தங்கள் சேவையை பூர்த்தி செய்ய முடியும் என நிதியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

57வயதிற்கு மேல் அரச சேவையில் பணியாற்று வதற்கான உடல் ரீதியான தகுதி இல்லாதவர்கள் சேவை நீடிப்பை கோரினால் குறிப்பிட்ட திணைக்களத்தின் தலைவர் அவர்களதுவேண்டுகோளை பரிசீலனை செய்து அவர்களிற்கு நீடிப்பை வழங்குவது குறித்து தீர்மானிக்க வேண்டும் எனவும் நிதியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட நபர் தொடர்ந்தும் பணியாற்றுவதற்கான உடல் தகுதியை இழந்துவிட்டார் என திணைக்களத்தின் தலைவர் கருதினால் குறிப்பிட்ட ஊழியருக்கு ஆறு மாத நீடிப்பை வழங்கலாம் எனவும் நிதியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.


🛒 யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது!!.. வருடத்தில் 365 நாட்களும் 24 மணி நேரமும் வர்த்தக நிலையம் திறந்திருக்கும் tharanysupermarket.com

🌐 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் hi2world.com

🖥️ வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது lankaface.com

சிறப்புச் செய்திகள்