அமைச்சர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் பயணில்லை

அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் அமைச்சர்களை பதவி நீக்கவேண்டும் – பசில் வேண்டுகோள் – அதன் பின்னரே நாடு திரும்புவார்

அடுத்த வருட ஆரம்பத்தில் அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளதாகவும் அதன் பின்னரே அமெரிக்காவிற்கு தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டுள்ள நிதியமைச்சர் நாடு திரும்புவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிதியமைச்சர் இந்த விடயம் குறித்த தனது உறுதியான நிலைப்பாட்டை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் தெரிவித்த பின்னரே அமெரிக்கா சென்றுள்ளார்.

மக்கள் மத்தியில் பிரபல்யமாவதற்காக அரசாங்கத்தின் செயற்பாடுகளிற்கு முட்டுக்கட்டை விதிக்கும் அமைச்சர்களுடன் இணைந்து பயணிப்பது கடினமான விடயம் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக நாடு தற்போது உள்ள பொருளாதார நிலையில் அரசாங்கம் மக்களின் ஆதரவு கிடைக்காத பல நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டியநிலையில் உள்ளது இந்த சூழ்நிலையில் அரசாங்கத்தின்கூட்டுப்பொறுப்பை ஏற்பதற்கு பதில் அதனை விமர்சிப்பவர்களுடன் இணைந்து செயலாற்றுவது கடினம் என அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான அமைச்சர்களை பதவியிலிருந்து நீக்கவேண்டும் என அவர் ஜனாதிபதி பிரதமரை கேட்டுக்கொண்டுள்ளார்.

அவ்வாறான அமைச்சர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் பயணில்லை எனவும் பசில் ராஜபக்ச ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் தெரிவித்துள்ளார்.


🛒 யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது!!.. வருடத்தில் 365 நாட்களும் 24 மணி நேரமும் வர்த்தக நிலையம் திறந்திருக்கும் tharanysupermarket.com

🌐 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் hi2world.com

🖥️ வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது lankaface.com

சிறப்புச் செய்திகள்