அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 8 வீதத்தால் வீழ்ச்சி

ஒக்டோபர் இறுதி வரையிலான காலப்பகுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 2.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன.

செப்டெம்பர் மாத கையிருப்பு 2.6 அமெரிக்க டொலர்களாக இருந்தது.

அதேவேளை ஒக்டோபர் இறுதியில் வெளிநாட்டு நாணய கையிருப்பு 1,686.1 மில்லியன் டொலர்களாகவும், சர்வதேச நாணய நிதியத்தில் கையிருப்பு நிலை 67.7 மில்லியன்களாகவும் இருந்தது.

விசேட பெறுநர் உரிமையின் கீழ் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 554.8 மில்லியன் டொலர், கடந்த ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி பெறப்பட்டதாகவும் அவற்றின் பெரும்பான்மையான தொகை அமெரிக்க டொலர்களாக மாற்றப்பட்டது.

இந்த நிலையில் திறைசேரியின் இருப்பானது 1,460,550.62 மில்லியன் ரூபாவாகும்.

அதேவேளை, 2021 நவம்பர் 5 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 8 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

சிறப்புச் செய்திகள்