அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாட்டால் பொது மக்கள் பாதிப்பு!

புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் சில மணித்தியாலங்களே உள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக மக்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் உரியத் தரத்துடன் கூடிய எரிவாயுவைச் சந்தைக்கு அனுப்புவதற்கு எரிவாயு நிறுவனங்கள் தவறியுள்ளமையினால் மக்கள் தொடர்ந்தும் எரிவாயு தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

இன்றைய தினமும் எரிவாயுவைக் கொள்வனவு செய்வதற்குச் சென்றிருந்த மக்கள் ஏமாற்றத்துடன் வீடுகளுக்குத் திரும்பியிருந்தனர்.

அத்துடன் பால்மா மற்றும் மண்ணெண்ணெய் என்பவற்றை கொள்வனவு செய்வதற்கு வருடத்தின் இறுதி நாளான இன்றைய தினமும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

இதேவேளை, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு இன்றைய தினம் குறைந்தளவான மரக்கறிகளே கிடைக்கப்பெற்றுள்ளன.

அத்துடன் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துக் காணப்பட்டன.

நுகர்வோரின் எண்ணிக்கையும் குறைவடைந்து காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதுதவிர, கொழும்பு – புறக்கோட்டை மரக்கறி விற்பனை மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துக் காணப்பட்டன.

இதேவேளை தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் விற்பனையாளர் ஒருவரினால் கொள்வனவு செய்யப்பட்ட பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் என்பன நபர் ஒருவரால் திருடப்பட்ட சம்பவம் ஒன்றும் பதிவாகியுள்ளது.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகிலுள்ள கண்காணிப்பு கமராவில் இந்த விடயம் பதிவாகியுள்ளது.


யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பரிசு மழை!

நீங்கள் வாங்கும் 3 பில்லுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!

1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲
3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱

நீங்களும் ஒரு அதிர்ஷ்டசாலியாக வேண்டும் எனின் காலம் தாழ்த்தாது இன்றே நேரடியாக விரையுங்கள் உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டிற்கு

⏰ உங்கள் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை தொடர்ந்து வழங்கி வருகிறது.!

🛒 தாரணிசூப்பர்மார்க்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற யாழில் இருந்து வழி செய்கிறது lankaface.com

Shop Now: tharanysupermarket.com

1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
(8 gram gold)

2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲

3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱

சிறப்புச் செய்திகள்