யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு விசேட சலுகை

யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகளுக்கு விசேட சலுகைகளை வழங்க வடமாகாண சுற்றுலா ஊக்குவிப்பு சபை முன்வந்துள்ளது.

மேலும் பயணிகளின் ரயில், மற்றும் ஹோட்டல் கட்டணங்களில் சலுகைகளை வழங்கவும் வடமாகாண சுற்றுலா ஊக்குவிப்பு சபை தயாராகியுள்ளது.

இதற்கமைய, யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா மேற்கொண்டு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் தங்கியிருக்கும் சுற்றுலாப் பயணிகளின் ரயில் கட்டணத்தில் 50 சதவீதம் திருப்பிச்செலுத்தப்படவுள்ளது.

இம்மாதம் 24 ஆம் திகதி முதல் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணத்திலுள்ள பல ஹோட்டல்களில் 2 மாத காலத்திற்கு 50 சதவீத கட்டணக்கழிவு வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.