இலங்கை இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண சங்கம் நடவடிக்கை

கொரோனா வைரஸ் தொற்றின் பின்னர், மீள தமது வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்த இலங்கை இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண சங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

சுற்றுலாத்துறை அமைச்சுடன் இணைந்த இந்த செயல்பாட்டினை முன்னெடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக சுற்றுலாத்துறை அமைச்சினால் கருத்தரங்கொன்று இடம்பெற்றது.

இந்த கருத்தரங்கில் சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் இலங்கை இரத்தினகல் மற்றும் தங்க ஆபரண சங்கம் என்பனவற்றின் உயர் மட்ட தரப்பினர் கலந்து கொண்டனர்.

இந்த கருத்தரங்கில் இரத்தினகல் மற்றும் தங்க ஆபரணம் சார் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் அதற்கான தீர்வு குறித்தும் ஆராயப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிற்கு முன்னர், இரத்தின கல் மற்றும் தங்க ஆபரண ஏற்றுமதி மூலம் சுமார் 50 கோடி அமெரிக்க டொலர் அந்நிய செலாவணியாக பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முழுவடிவம்

யாழ் நகரில் பிரம்மாண்டமான முறையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது தாரணி சுப்பர் மார்க்கெட் – யாழ் தட்டாதெருச் சந்தியின் அருகில் 
TharanySuperMarket.com

உங்கள் வாசல் தேடி வருகிறது!! லங்காபேஸ் இணையம் வீட்டிட்கு தேவையான அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில்! LankaFace.com


LankaFace.com


Hi2World.com


O2Oexam.com

TharanySuperMarket.com

Address  : No. 758 Kankesanturai Road, Jaffna 40000, Sri Lanka
Contact  : +94 212 223 433
Location : https://maps.app.goo.gl/8vpiuxH712fq9EN86