இலங்கைக்கான சுற்றுலா பயணிகளின் வருகையில் பாரிய அளவில் வீழ்ச்சி

கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் இலங்கைக்கான சுற்றுலா பயணிகளின் வருகையில் பாரிய அளவில் வீழ்ச்சியேற்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும் கடந்த ஜனவரி மாதம் முதல் கட்டுநாயக்க சர்வதேச வாநூர்தி நிலையம் பயணிகளின் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டதன் பின்னர் நிலைமையில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

தற்போது தெரிவு செய்யப்பட்ட சில நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருவதாக சுற்றுலாத்துறை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

அதிக அளவில் சுற்றுலா பயணிகள் ஜேர்மனி, இந்தியா, பிரான்ஸ் மற்றும் பிர்தானியா போன்ற நாடுகளில் இருந்தே வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தாக்கம் அந்த நாடுகளில் தொடர்ந்தும் உள்ளதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வருடம் கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதங்கள் வரையிலான காலப்பகுதியினில், சுமார் 4 ஆயிரத்து 500 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கை வந்துள்ளதாக சுற்றுலா துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால், கடந்த 2019ஆம் ஆண்டு இதே காலப்பகுதியினில் 7,40,600 பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ் நகரில் பிரம்மாண்டமான முறையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது தாரணி சுப்பர் மார்க்கெட் – யாழ் தட்டாதெருச் சந்தியின் அருகில் 
TharanySuperMarket.com

உங்கள் வாசல் தேடி வருகிறது!! லங்காபேஸ் இணையம் வீட்டிட்கு தேவையான அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில்! LankaFace.com


LankaFace.com


Hi2World.com


O2Oexam.com

TharanySuperMarket.com

Address  : No. 758 Kankesanturai Road, Jaffna 40000, Sri Lanka
Contact  : +94 212 223 433
Location : https://maps.app.goo.gl/8vpiuxH712fq9EN86