பல இலட்சம் ரூபாய் செலவில் சுற்றுலா முக்கோண வலயம் ஆரம்பம்

அம்பாந்தோட்டை, மொனராகலை மற்றும் அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கி சுற்றுலா முக்கோண வலயமொன்றை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் இத்திட்டத்துக்கு 900 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. எனினும் இத்திட்டத்தை ஆறு மாதகாலத்துக்குள் பூர்த்திசெய்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதன் முதற் கட்டமாக பாதுகாப்பு அறைகள், தன்னியக்க பண இயந்திரங்களை பொருத்துதல், சிற்றுண்டிச்சாலை, கைப்பணி விற்பனை நிலையம், பிரவேச அட்டை விநியோக பிரிவு, தகவல் காரியாலயம் மற்றும் அடிப்படைவசதிகள் பிரிவு என்பனவற்றினை நிர்மாணிப்பதற்கு திட்டமிட்டுள்ளது.

சுற்றுலாத் துறையினை அபிவிருத்தி செய்து தேவையான அடிப்படை வசதிகளையும் மேம்படுத்தவதற்கும் இதன்மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் நாட்டில் கலாசார முக்கோண வலயமான அநுராதபுரம், பொலன்னறுவை மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையிலும் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.