
இலங்கையிலுள்ள நான்கு பிரதான மீன்பிடித் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லெவரூட் தெரிவித்துள்ளார்.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும், பிரான்ஸ் தூதுவருக்கும் இடையே நேற்று இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
தென் பகுதியிலுள்ள காலி, பேருவளை, குடாவெல்ல மற்றும் குரானவெல்ல ஆகிய மீன்பிடி துறைமுகங்களை அபிவருத்தி செய்வதற்கு தமது அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளதாக பிரான்ஸ் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கான ஆய்வு நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்படுகிறது.
விரைவில் அதற்கான பணிகளை ஆரம்பிக்க முடியுமெனவும் அத்துடன் கிழக்கு மாகாணத்தில் நன்னீர் மீன்பிடி துறையை அபிவிருத்தி செய்வதற்கு ஆர்வமாகவுள்ளதாகவும் பிரான்ஸ் தூதுவர் எரிக் லெவரூட் குறிப்பிட்டுள்ளார்.
யாழ் நகரில் பிரம்மாண்டமான முறையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது தாரணி சுப்பர் மார்க்கெட் – யாழ் தட்டாதெருச் சந்தியின் அருகில்
TharanySuperMarket.com
Address : No. 758 Kankesanturai Road, Jaffna 40000, Sri Lanka
Contact : +94 212 223 433
Location : https://maps.app.goo.gl/8vpiuxH712fq9EN86