வெளிநாட்டு கணக்கை ஆரம்பிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள கால எல்லை நீடிப்பு

அந்நிய செலாவணி சட்டத்தின் கீழ் வெளிநாட்டு கணக்கை ஆரம்பிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள கால எல்லையை நீடிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

நேற்று (05) நடைபெற்ற அமைச்சரவையில் இதுதொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2021 மார்ச் மாதம் அளவில் இந்த வைப்பீட்டு கணக்கில் 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வைப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தற்பொழுது உள்ள வைப்பீட்டு பணத்தை தக்கவைக்கும் நோக்கத்துடன் மேலதிக வட்டியை செலுத்துவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் வருமாறு:

07. 2017 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க அந்நிய செலாவணி சட்டத்தின் கீழ் ‘விசேட வைப்புக் கணக்’கை ஆரம்பிப்பதற்கு வழங்கப்பட்டுள்ள கால எல்லையை நீடித்தல்

அந்நிய செலாவணியை எமது நாட்டுக்கு அனுப்புவதை ஊக்குவிப்பதற்காக 2020 ஏப்ரல் மாதம் தொடக்கம் நடைமுறையிலுள்ள விசேட வைப்புக் கணக்குக்கான ஏற்பாடுகள் 2017 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க அந்நிய செலாவணி சட்டத்தின் கீழ் குறித்த கட்டளைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவ்வாறே குறித்த கணக்குகளில் காணப்படும் வைப்புக்களை தொடர்ந்து பேணும் நோக்கில் மேலதிக வட்டியை வழங்குவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 2021 மார்ச் மாதம் வரையில் குறித்த வைப்புக் கணக்குகளில் 360.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வைப்பிலிடப்பட்டுள்ளது. குறித்த விசேட வைப்புக் கணக்குகளை திறப்பத்தற்கான கால எல்லை 2021 ஏப்ரல் மாதம் 07 ஆம் திகதியுடன் முடிவடைய இருப்பதால் தொடர்ந்து பணத்தை வைப்பிலிடுவதற்கு விருப்பம் தெரிவிக்கும் தரப்பினர்களை ஊக்குவிக்கும் வகையில் குறித்த காலவரையறையை தொடர்ந்து நீடிப்பதற்காகவும், அதற்காக அந்நிய செலாவணி சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் கட்டளைகளை பிறப்பிப்பதற்கும் நிதி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

யாழ் நகரில் பிரம்மாண்டமான முறையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது தாரணி சுப்பர் மார்க்கெட் – யாழ் தட்டாதெருச் சந்தியின் அருகில் 
TharanySuperMarket.com


LankaFace.com


Hi2World.com


O2Oexam.com

TharanySuperMarket.com

Address  : No. 758 Kankesanturai Road, Jaffna 40000, Sri Lanka
Contact  : +94 212 223 433
Location : https://maps.app.goo.gl/8vpiuxH712fq9EN86