இலங்கைக்கான கடன் தொகையை வழங்க IMF அனுமதி

இலங்கைக்கான ஐந்தாவது தவணைக்குரிய கடன்தொகையை விடுவிப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய, 164.1 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது.

3 வருடங்கள் செயற்றிட்டத்தின் கீழ் 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை வழங்குவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டது.

இந்தக் கடன் திட்டத்தின் இறுதித் தவணை கடந்த வருடம் இறுதியில் பெற்றுக் கொள்ளப்படவிருந்த நிலையில், இலங்கையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி காரணமாக அந்த செயற்பாடு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

இந்தக் கடன் திட்டத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிப்பதற்கும் நேற்று (13ஆம் திகதி) கூடிய சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழு இணக்கம் தெரிவித்துள்ளது.