சோளம் பயிரிடலை நிறைவு செய்யுமாறு கோரிக்கை

எதிர்வரும் புதன்கிழமைக்கு (15) முன்னர் சோளம் பயிரிடலை நிறைவு செய்யுமாறு விவசாயிகளிடம் விவசாய திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

அதன் பின்னர் மேற்கொள்ளப்படும் பயிரிடுகை நடவடிக்கைகளில் சேனா படைப்புழுவின் தாக்கத்தை எதிர்கொள்ள வேண்டியேற்படும் என திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

விவசாயிகள், உற்பத்தி நடவடிக்கைகளுக்கான வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும் எனவும் விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.