மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

பச்சை மிளகாய், பாகற்காய், புடலங்காய், பீர்க்கங்காய் உள்ளிட்ட மரக்கறிகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தம்புள்ளை விசேட பொருளாதர மத்திய வர்த்தக சங்கத்தின் செயலாளர் ஐ.பி. விஜேநந்த கூறியுள்ளார்.

கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், மரக்கறிகளின் விலை 100 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.