நாட்டுக்காக ஒன்றிணைவோம்

நாட்டுக்காக ஒன்றிணைவோம் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் கடந்த ஐந்து நாட்களில் 2 ஆயிரத்து 348 வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக மாவட்ட செயலாளர் டீ.எம்.பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் நீர்ப்பாசனத் துறையில் தன்னிறைவு கண்ட பிரதேசமாகும். இலங்கையின் அரிசித் தேவையில் நான்கில் ஒரு பகுதியை அம்பாறை மாவட்டம் பூரத்தி செய்கின்றது. 17 சதவீதமான மீன் உற்பத்தியும் இங்கு இடம்பெறுகின்றது. அதிகளவிலான பால் உற்பத்தியும் அம்பாறை மாவட்டத்தில் இடம்பெறுவதோடு, 12 ஆயிரம் மெற்றிக் தொன் சீனி உற்பத்தி செய்யப்படுகின்றது.

அறுவடையின் பின்னரான சேதங்களைக் குறைப்பதன் மூலம் உணவு உற்பத்தியை 25 சதவீதத்தினால் அதிகரிக்க முடியும். இதன் மூலம் ஐந்து லட்சத்து 21 ஆயிரத்திற்கும் அதிகமானோர் நன்மையடைவார்கள். 121 மில்லியன் ரூபா பெறுமதியான நிதி அபிவிருத்தித் திட்டங்களுக்காக செலவிடப்பட்டிருக்கின்றது என்றும் மாவட்ட செயலாளர் கூறினார்.