சோள உற்பத்தி பணிகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை

எதிர்வரும் புதன்கிழமைக்கு முன்னர் சோளத்தை பயிரிடும் பணியை நிறைவு செய்யுமாறு விவசாய திணைக்களம் விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

எதிர்வரும் புதன்கிழமைக்கு பின்னர் படிப்படியாக சோள உற்பத்தி செய்யப்படுவதன் மூலம் சேனா படைப்புழுவின் தாக்கத்தை எதிர்க்கொள்ளவேண்டி ஏற்படும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

உற்பத்தி நடவடிக்கைக்கான வழிகாட்டிகளை கடைப்பிடிப்பது அவசியமாகும். உடனடி தொலைப்பேசி இலக்கத்தினூடாக தொடர்புக் கொண்டு விவசாய ஆலோசனை சேவையில் தேவையான தொழிற்நுட்ப ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடியும். இதற்கான தொலைப்பேசி இலக்கம் 1920 ஆகும்.

பிரதேச விவசாய ஆலோசனை அல்லது துறையுடன் சம்பந்தப்பட்ட துறை அபிவிருத்திகளை சந்தித்து இது தொடர்பான ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.