பயணக் கட்டுப்பாடுகள் நீக்கம் – வெளிநாட்டு அமைச்சு

ஐக்கிய இராச்சியத்திலிருந்து இலங்கைக்கு மேற்கொள்ளும் பயணங்களுக்காக அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட தற்காலிக பயணத் தடை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளிநாட்டு அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

ஊடக வெளியீடு

ஐக்கிய இராச்சியத்திலிருந்தான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன – வெளிநாட்டு அமைச்சு

ஐக்கிய இராச்சியத்தில் நிலவும் மாற்றமடைந்த புதிய கோவிட்-19 தொற்றுநோயின் காரணமாக ஐக்கிய இராச்சியத்திலிருந்து இலங்கைக்கு மேற்கொள்ளும் பயணங்களுக்காக அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட தற்காலிக பயணத் தடை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளது.

சுகாதார அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்ட 14 நாட்கள் தனிமைப்படுத்தல் மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்பட்டு, ஐக்கிய இராச்சியத்தில் இருந்து பயணம் செய்வதற்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு அதிமேதகு ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்திப் பணியகம் அறிமுகப்படுத்திய வழிகாட்டுதலின் கீழ் ஐக்கிய இராச்சியத்திலிருந்தான சுற்றுலாப் பயணிகளின் வருகையும் மீண்டும் ஆரம்பிக்கப்படும்.

வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு
2021 பெப்ரவரி 17

புலம்பெயர் மக்கள் வடமாகாண மக்களுக்கு அனுப்ப 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் Online Shopping இங்கே அழுத்தவும் Hi2World.com

உங்கள் வாசல் தேடி வருகிறது!! லங்காபேஸ் இணையம் வீட்டிட்கு தேவையான அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில்! LankaFace.com

மாணவர்களே நீங்கள் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற ஒரு அரிய சந்தர்ப்பம்!  (Offline to Online Exam) o2oexam.com

யாழ் நகரில் பிரம்மாண்டமான முறையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது தாரணி சுப்பர் மார்க்கெட் – யாழ் தட்டாதெருச் சந்தியின் அருகில் 
TharanySuperMarket.com

LankaFace.com

Hi2World.com

O2Oexam.com

TharanySuperMarket.com

Address  : No. 758 Kankesanturai Road, Jaffna 40000, Sri Lanka
Contact  : +94 212 223 433
Location : https://maps.app.goo.gl/8vpiuxH712fq9EN86