விமான சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பம்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இலங்கையுடன் விமானப் பயணங்களை தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்த டுபாய் விமான சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ப்ளை டுபாய் (Fly Dubai) விமான சேவையின் முதலாவது விமானம் 58 பயணிகளுடன் டுபாயிலிருந்து இன்று அதிகாலை 12.50 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்த விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து 166 பயணிகளுடன் இன்று அதிகாலை 1.50 மணிக்கு மீண்டும் டுபாய் நோக்கி புறப்பட்டது.

ப்ளை டுபாய் (Fly Dubai) விமான சேவை வாரத்திற்கு இரண்டு தடவை (செவ்வாய் மற்றும் வியாழன்) அதிகாலை டுபாயிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு நேரடி விமான போக்குவரத்து சேவையை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் விமான நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் மக்கள் வடமாகாண மக்களுக்கு அனுப்ப 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் Online Shopping இங்கே அழுத்தவும் Hi2World.com

உங்கள் வாசல் தேடி வருகிறது!! லங்காபேஸ் இணையம் வீட்டிட்கு தேவையான அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில்! LankaFace.com

மாணவர்களே நீங்கள் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற ஒரு அரிய சந்தர்ப்பம்!  (Offline to Online Exam) o2oexam.com

யாழ் நகரில் பிரம்மாண்டமான முறையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது தாரணி சுப்பர் மார்க்கெட் – யாழ் தட்டாதெருச் சந்தியின் அருகில் 
TharanySuperMarket.com

LankaFace.com

Hi2World.com

O2Oexam.com

TharanySuperMarket.com

Address  : No. 758 Kankesanturai Road, Jaffna 40000, Sri Lanka
Contact  : +94 212 223 433
Location : https://maps.app.goo.gl/8vpiuxH712fq9EN86