
2020 / 2021 பெரும்போகத்தில் நெற்கொள்வனவிற்கான நிர்ணய விலை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
இம்மாதம் இரண்டாம் வாரம் தொடக்கம் பெரும்போக நெல் அறுவடை ஆரம்பமாவதால் நிர்ணய விலையில் நெல்லை கொள்வனவு செய்வதற்கு நெல் சந்தைப்படுத்தல் சபை தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, 14 சதவீத ஈரலிப்பு கொண்ட தர நியமமான நாட்டரிசி நெல் ஒரு கிலோகிராமுக்கான நிர்ணய விலையாக 50 ரூபாவும் 01 கிலோகிராம் சம்பா நெல்லுக்கான நிர்ணய விலையாக 52 ரூபாவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்போக நெற்கொள்வனவு திட்டம் தொடர்பில் விவசாய அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பத்திரங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.