
புதிதாக மஞ்சள் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு வழங்கப்படும் விதை நிவாரணத்தை இருமடங்காக்குவதற்கு சிறு தோட்டப் பயிர்ச்செய்கை அபிவிருத்தியுடன் தொடர்புடைய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு தீர்மானித்துள்ளது.
இம்முறை மஞ்சள் விளைச்சலில் ஒருபகுதியை அரசாங்கம் கொள்வனவு செய்வதற்கு உத்தேசித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்பர தெரிவித்துள்ளார்.
மஞ்சள் அறுவடையை அடுத்த இரு வாரங்களுக்குள் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன்மூலம் தற்போது நிலவும் மஞ்சளுக்கான தட்டுப்பாட்டை நிவர்த்திக்க முடியம் எனவும் இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்பர தெரிவித்துள்ளார்.