20 ரூபா நாணயக்குற்றி வௌியீடு

புலம்பெயர் மக்கள் வடமாகாண மக்களுக்கு அனுப்ப 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் Online Shopping இங்கே அழுத்தவும்

இலங்கை மத்திய வங்கியினால் வௌியிடப்பட்டுள்ள 20 ரூபா நாணயக்குற்றி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் இன்று கையளிக்கப்பட்டது.

மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் W.D.லக்‌ஷ்மன் நாணயக்குற்றியை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் 70 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு 20 ரூபா நாணயக்குற்றி வௌியிடப்பட்டுள்ளது.

அலுமினியம் மற்றும் வெண்கலத்தால் 20 ரூபா நாணயக்குற்றி தயாரிக்கப்பட்டுள்ளது.

புதிய 20 ரூபா நாணயக் குற்றிகள் மூவாயிரம் இன்று வௌியிடப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

பொதுப் பயன்பாட்டிற்கு அன்றி, மத்திய வங்கியின் தலைமையகம் மற்றும் மாவட்ட கிளைகளில் 1300 ரூபாவிற்கான 20 ரூபா நாணயக்குற்றிகளை மாத்திரம் விநியோகிக்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

மாணவர்களே நீங்கள் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற ஒரு அரிய சந்தர்ப்பம்! o2oexam.com (Offline to Online Exam)