
புதிய ஆண்டின் முதலாவது திறைசோி முறிகளுக்கான ஏல விற்பனை ஜனவாி 06ம் திகதி நடைபெறவுள்ளதாக மத்திய வங்கி தொிவித்துள்ளது.
இதில் 40,000 பில்லியன் ரூபா பெறுமதியான ஏல விற்பனை நடைபெறுவதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
91 நாட்களில் காலாவதியாகும் 10,000 மில்லியன் ரூபா பெறுமதியான முறிகள் மற்றும் 182 நாட்களில் காலாவதியாகும் 5,000 மில்லியன் ரூபா பெறுமதியான முறிகள் மற்றும் 364 நாட்களில் காலாவதியாகும் 25,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி முறிகளுக்கான ஏல விற்பனையே இதன்போது மேற்கொள்ளப்படவுள்ளதாக மத்திய வங்கி தொிவித்துள்ளது.