பெரும்போக அறுவடை நெல்லினை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானம்

புலம்பெயர் மக்கள் வடமாகாண மக்களுக்கு அனுப்ப 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் Online Shopping இங்கே அழுத்தவும்

மட்டக்ளப்பு மாவட்டத்தில் பெரும்போக நெற்செய்கை அறுவடை நெல்லினை அரச நெல் சந்தைப்படுத்தல் சபையினால் எதிர்வரும் ஜனவரி மாதம் 10 ஆம் திகதி முதல் கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக 18 ஆயிரம் மெற்றிக் டன் நெல்லினைக் கொள்வனவு செய்வதற்கான ஆயத்தங்களை அரச நெல் சந்தைப்படுத்தல் சபை மேற்கொண்டுள்ளதாக சபையின் பிராந்திய முகாமையாளர் ஏ.ஜீ. நிமால் எக்கநாயக தெரிவித்துள்ளார்.

இந்த மாவட்டத்தில் கொள்வனவு செய்யப்படும் நெல்லினை களஞ்சியப்படுத்துவதற்காக தற்போது பயன்பாட்டிலுள்ள களஞ்சியங்கள் மற்றும் மேலதிகமாக தேவைப்படும் களஞ்சியங்கள் போன்றவற்றினை பெற்றுக் கொடுக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர விவசாயிகளின் நெல்லினை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக மாவட்டத்தில் நவீன முறையில் நெல்லை உலரவைக்கும் 20 இடங்களை தெரிவு செய்து அதற்கான வசதிகளைப் பெற்றுக் கொடுக்கவும் அரச நெல் சந்தைப்படுத்தல் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

மாணவர்களே நீங்கள் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற ஒரு அரிய சந்தர்ப்பம்! o2oexam.com (Offline to Online Exam)