
இலங்கை சுபீட்சச் சுட்டெண்ணானது ‘பொருளாதாரம், வியாபாரச் சூழல் மற்றும் ‘சமூக பொருளாதார உட்கட்டமைப்பு ஆகிய துணைச் சுட்டெண்களில் சிறிதளவான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இது 2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2019 இல் 0.8 ஆல் குறைந்து பதிவாகியுள்ளதாக இலங்கை மத்தியவங்கி வெளியிட்டுள்ளது.
சுற்றுலா மற்றும் அதனுடன் தொடர்புபட்ட கைத்தொழில்கள் மீது ஏப்ரல்21 தாக்குதல் ஏற்படுத்திய தாக்கங்கள் தொழிலின்மையில் அதிகரிப்பை ஏற்படுத்தியமை அத்துடன் கடந்த ஆண்டின் பிற்பகுதியை நோக்கிய மோசமான வானிலை நிலைமைகளினால் ஏற்பட்ட உயர்வான பணவீக்கம் என்பன பொருளாதார மற்றும் வியாபாரச் சூழல் துணைச் சுட்டெண்ணின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.
ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் பாதுகாப்பு பற்றிய கரிசனைகளின் காரணமாக பொதுப் போக்குவரத்தினைக் குறைவாகப் பயன்படுத்தியமை சமூக-பொருளாதார உட்கட்டமைப்புச் சுட்டெண்ணில் வீழ்ச்சிக்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.