செலாவணி வீதத் தளம்பலின் அண்மைக்கால அதிகரிப்பு அடிப்படையற்றது

புலம்பெயர் மக்கள் வடமாகாண மக்களுக்கு அனுப்ப 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் Online Shopping இங்கே அழுத்தவும்

செலாவணி வீதத் தளம்பலின் அண்மைக்கால அதிகரிப்பு அடிப்படையற்றதும் ஏற்றுக்கொள்ள முடியாததுமாகும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

ஏனைய வழிமுறைகளுக்கு மத்தியில் மத்திய வங்கியானது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செலாவணி சந்தையில் தளம்பல்களைக் கட்டுப்படுத்துவதற்கு பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியினை தொடர்ந்தும் கட்டுப்படுத்துவதுடன் அமெரிக்க டொலர் ஒன்றுக்கான ரூபாவின் பெறுமதியானது கடந்த நவம்பர் மாதத்தில் அவதானிக்கப்பட்டவாறு 185 இற்குக் கீழ் மட்டங்களை நோக்கி அடுத்துவரும் சில நாட்களினுள் உயர செய்ய முடியும்.

அலுவல்சார் ஒதுக்குகள் போதுமான மட்டத்தில் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது, மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் 5.6 பில்லியன் அமெரிக்க டொலராக காணப்படுகின்றது.

ஒதுக்குகளின் மட்டத்தினை அதிகரிப்பதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இணைத்தரப்பினர்களுடனான கலந்துரையாடல்களும் இறுதி மட்டத்தினை எட்டியுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மாணவர்களே நீங்கள் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற ஒரு அரிய சந்தர்ப்பம்! o2oexam.com (Offline to Online Exam)