பயனாளிகளுக்கு சலுகை வட்டியின் கீழ் கடனுதவி

20 இலட்சம் குடும்பங்களை சேர்ந்த சமுர்த்தி பயனாளிகளுக்கு தலா 15,000 ரூபா கடன் தொகையை சலுகை வட்டியின் கீழ் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்காக 6,000 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஆரம்ப கைத்தொழில்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயா கமகே தெரிவித்தார்.

இதில் 3,000 கோடி ரூபாவை புத்தாண்டிற்கு முன்னர் வழங்கவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

சிறு மற்றும் நடுத்தர அளவிலான வியாபார நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு குறித்த கடன் வழங்கப்படுவதாகவும் அமைச்சர் தயா கமகே தெரிவித்தார்.